ஏ சிங்கள இராணுவமே..
மனிதம் என்பதை மறந்துவிட்டு..
இன்னும் எதைச் சாதிக்கப் போகிறாய்?
ஏ ராட்சச பாக்சேவே..
நேப்பாளத்தில்..
மாவோ கிளர்ச்சியினர்
ஆயுதம் ஏந்தியே
சமரசம் பேசவில்லையா?
இன்னும்
எத்தனை பேர் இறந்தால்
உன் பசி அடங்கும்?
தமிழர்களோடு..
உன்னினமும் தானே அழிகிறது..!
ஒன்று மட்டும் சொல்கிறேன்..
எங்களின் சமாதிகளில் நின்று
சமாதானம் பேசாதே..
எங்கள் பிணம்கூட
இப்போது போருக்கு தயார்..!
எங்கள்
வீடுகளை தகர்க்கும் உங்கள் கைகள்
நாளை
நெருப்பில் கூட வேகாமல் போகட்டும்..
எங்கள்
சகோதரிகளை களங்கப்படுத்தும்
உங்கள் குறிகள்
நாளை
நாய்களுக்கு இரையாகட்டும்..
எங்கள்
குழந்தைகளை கொலை செய்யும் பாதகர்களே..
நாளை உங்கள் நாடே சுடுகாடாகட்டும்..!
மறந்துவிட்டாயா..?
இலங்கேசுவரனே எங்கள் இனம்தான்..
எங்களுக்கும் அங்கே சரித்திரம் உண்டு..
இல்லை இல்லை..
எங்களுக்குத்தான் அங்கே சரித்திரம் உண்டு!
ஏ இராட்சச பாக்சேவே..
மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தருகிறோம்..
உயிர் மேல் உனக்கு ஆசையிருந்தால்..
கடவுள் மேல் நம்பிக்கை இருந்தால்..
புத்தனின் மதத்தில் மதிப்பு இருந்தால்..
சாத்தானே..
இப்போதே பின்வாங்கு!
-கிருஷ்ணமூர்த்தி
Monday, February 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
hi :)
வணக்கம் அன்பரே! வாழ்க தமிழ், வளர்க நட்பு!
சிங்கள பேரினவாதத்தை கன்னத்தில் அறையும் வரிகள்..
//இலங்கேசுவரனே எங்கள் இனம்தான்..
எங்களுக்கும் அங்கே சரித்திரம் உண்டு..
இல்லை இல்லை..
எங்களுக்குத்தான் அங்கே சரித்திரம் உண்டு!//
இளையத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டிய வரலாற்று வரிகள்.
சிங்களவனின் ஒவ்வொரு குண்டுக்கும் தமிழன் பதில் சொல்லாமல் ஓயப்போவதில்லை.
//எங்களின் சமாதிகளில் நின்று
சமாதானம் பேசாதே..
எங்கள் பிணம்கூட
இப்போது போருக்கு தயார்..!//
இந்த வரிகளைக் கேட்டதும்..
என் மணைவியின் கண்கள் குளமாகிவிட்டன!
அருமையான வரிகள். ஒவ்வொரு தமிழனின் உணர்வையும் தொட்டுச் செல்லும் உணர்ச்சிமிக்க வரிகள். வாழ்த்துக்கள்...
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.