Thursday, February 12, 2009

உன்னைத் தொழுது கொள்..


தமிழா..

சோகங்கள்..
மேகங்களாய் பொழியட்டும்..
ஆக்கத்தின் எருவாகட்டும்..

ஊனங்களை..
தானங்களாக தந்துவிடுங்கள்..
வானத்தையும் தொட்டுவிடலாம்..!

தோள்களிலே தோல்விகளா?
துரத்தியடி தூக்கு மேடைக்கு..

***
காதல் தோல்வியா?
கல்யாணம் செய்துகொள்..
காதலை தோற்கடி!

ஏட்டுக்கல்வி ஏறவில்லையா?
தொழிற்கல்வியும்
சோறு போடும்
மறந்துவிடாதே!!

பெற்றவன் பாட்டாளியா?
பிள்ளை நீ
பட்டதாரியாவதில் பாவமில்லை...!

கையிலே காசு இல்லையா?
கல்வி போதும்
கவலை விடு!

மின்சாரம் எதிரியானதா?
மெழுகுவர்த்தி
இங்கே இன்னும் கிடைக்கிறது..

சம்சாரமே மின்சாரமானதா?
மின்சாரத்தின் நன்மைகள் கோடி..
மனதில் நிறுத்து..!

தேவைகள்
தீர்ந்தபாடில்லையா?
தேக்கி வைத்து இலாபமென்ன?

பாதையில்
பாறைகளா??
பகுத்தறிவு படைத்தது எதற்காக?

தூக்கம்...!

ஆம்..
தூக்கம்தான்
தோல்விகளின் இருப்பிடம்..
தெரிந்து வைத்து கொள்..
தூக்கத்தைக் கொல்..!
தூங்கிக் கிடந்தவன்
எதையும்
சாதித்ததாக சரித்திரம் இல்லை!

****

உடன்பிறப்பே..

விழி..
விழித்தெழு..
வேங்கை,
உறங்கினால் வேங்கையாகாது!

தொழு..
உனைத்தொழு..
இந்த உலகமே
உன்னை
ஒருங்கிணைந்து தொழ வேண்டும்!!

படு..
செயல்படு..
வாய்பேச்சு வீரன்
என்றவன்
வாயை அடை..!

விடு..
சோம்பல் விடு..
சுறுசுறுப்பை
எறும்பிடம் கற்பது
ஏளனமா என்ன..?

உன்னுள்
உறங்கும் உணர்வுகளை
உசுப்பி விடு..
உலகமே
உன்னுள் அடங்கும்...!!!

-கிருஷ்ணமூர்த்தி

4 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

குமரன் மாரிமுத்து said...

//தூங்கிக் கிடந்தவன்
எதையும்
சாதித்ததாக சரித்திரம் இல்லை!//

இன்னும் ஒரு மாதந்தானே.. விட்டுவிடுங்கள்.. உங்கள் கவிதையை முன்பே நமது பிரதமரருக்கு அனுப்பியிருந்தால்... நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.

கிருஷ்ணா said...

வலப்பூக்களுக்கு மீண்டும் நன்றி!

து. பவனேஸ்வரி said...

எழுச்சியான வரிகள்...

Post a Comment

தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.

என்னை தொடரும் உறவுகள்..

 
Tamil Top Blogs