என் காதலி
முகம் பார்க்கும்
கண்ணாடி..
வானத்து
நிலைக்கண்ணாடியில்
அவள் முக பிம்பம்..
அவளுக்கு மட்டும்..
தேய்பிறை வயது..
வளர்பிறை இளமை..!
நிலா..
அது,
வெருச்சோடிய
இரவின் நெற்றியில்
இறைவன் இட்ட
திருநீர்த் திலகம்..
நிலா..
கடல் பெண்..
சினங்கொண்ட
சிகப்புச் சூரியனை விழுங்கி..
வெள்ளி நிலவாக
வானத்துக் கூரையில்
வீசிவிட்டாளோ??
-K.கிருஷ்ணமூர்த்தி
3 comments:
சிறப்பாக இருக்கிறது....
உங்கள் எழுத்துறு மட்டறுத்தலை நீக்கிவிடுங்கள்... படிப்பவர்கள் மறுமொமிகள் போட இலகுவாக இருக்கும்...
நிலவுக் கவிதை உண்மையேலே சூப்பார்... நல்ல உச்ச கற்பனை..
சில வரிகள் அள்ளுதுங்க...
////
என் காதலி
முகம் பார்க்கும்
கண்ணாடி../////////
////////
இரவின் நெற்றியில்
இறைவன் இட்ட
திருநீர்த் திலகம்..
///////////
//அவளுக்கு மட்டும்..
தேய்பிறை வயது..
வளர்பிறை இளமை..! //
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்?
Post a Comment
தயை கூர்ந்து, நல்ல தமிழில், நாகரீகமாக உங்கள் மறுமொழிகளை இடுங்கள். அறிவுப்பூர்வமான தர்க்கங்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.